உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மஹா பெரியவா சரணாலயம் பிரதிஷ்டா தின மகோற்சவம்

மஹா பெரியவா சரணாலயம் பிரதிஷ்டா தின மகோற்சவம்

நங்கநல்லுார்:நங்கநல்லுார், கண்ணன் நகர் 5வது பிரதான சாலை பகுதியில் மஹா பெரியவா சரணாலயம் அமைந்துள்ளது. பக்தர்களால் 'ஜி.ஆர்., மாமா' என, அன்புடன் அழைக்கப்படும் ஈரோடைச் சேர்ந்த காயத்ரி ராஜகோபால் என்பவரின் முயற்சியால் இந்த சரணாலயம் நிர்மாணிக்கப்பட்டது.சரணாலய வளாகத்தில், ஸ்துாபி நிறுவப்பட்டுள்ளது. அதன் மீது கை கூப்பிய நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார்.தரைத்தளத்தில் காஞ்சி மஹா பெரியவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் தளத்தில் காமாட்சி, காயத்ரி தேவி சன்னிதிகள் உள்ளன. இரண்டாம் தளத்தில் சொற்பொழிவு அரங்கும், மூன்றாம் தளத்தில் அன்னதானக்கூடமும் உள்ளது.இந்த நிலையில், சரணாலயத்தின், 2வது ஆண்டு பிரதிஷ்டா தின மகோற்சவம், நாளை கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு, காலை, மாலை இருவேளையிலும் நேற்று முதல் வேதபாராயணம் நடக்கிறது. பிரஷ்திடா தின மகோற்சவ தினமான நாளை காலை 8:30 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம், நட்சத்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, பெரியவா அபிஷேகம், அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, ஷோடச உபசாரம், தீபாராதனை நடக்கிறது.மாலை 6:00 மணி முதல் டாக்டர் சுதா சேஷய்யன், 'கர்மாக்கள் சரீரத்திற்கா, ஆத்மாவிற்கா' என்ற தலைப்பிலும்; இந்திரா சவுந்திரராஜனின், 'பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே ஆத்மாவின் பயணம்' என்ற தலைப்பிலும் சொற்பொழிவும் நிகழ்த்துகின்றனர்.வரும், 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு 'பெரியவாளும், பெருமாளும்' என்ற தலைப்பில் இந்திரா சவுந்திரராஜன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மஹா பெரியவா சரணாலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை