மேலும் செய்திகள்
ஆவடியில் 4 இன்ஸ்., இடமாற்றம்
4 minutes ago
செய்திகள் சில வரிகளில்
6 minutes ago
ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
9 minutes ago
தி.மு.க., மோசடி: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
9 minutes ago
பள்ளிக்கரணை: 'ஹெல்த்கேர்' நடத்துவதாக பெயர் பலகை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த நான்கு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். பள்ளிக்கரணை பகுதியில், 'ஹவுரா ஹெல்த்கேர்' எனும் பெயரில் செயல்பட்டு வரும் மையத்தில், பெண்களை வைத்து விபசாரத் தொழில் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அம்மையத்தை தொடர்ந்து கண்காணித்த போலீசார், தகவல் உறுதி செய்யப்பட்டதால் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஹெல்த்கேர் என்ற பெயரில் விபசார தொழில் செய்து வந்த காசிமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன், 34, என்பவர், பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு விபசாரத்திற்கு ஈடுபடுத்தப்பட்ட நான்கு இளம் பெண்கள் மீட்கப்பட்டு, அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், எழும்பூரில், தனியார் ஹோட்டலில் பாலியல் தொழில் நடத்திய, பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, 53, என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அங்கிருந்த இரு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
4 minutes ago
6 minutes ago
9 minutes ago
9 minutes ago