உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உரிமமின்றி சவுடு மண் ஏற்றிச் சென்றவர் கைது

உரிமமின்றி சவுடு மண் ஏற்றிச் சென்றவர் கைது

ஆவடி திருவேற்காடில் இருந்து ஆவடி வழியாக, உரிமம் இல்லாமல் சவுடு மண் ஏற்றிச் செல்வதாக, வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.ஆவடி தாசில்தார் தலைமையில், வருவாய் துறையினர், பருத்திப்பட்டு செக்போஸ்ட் அருகே, நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பருத்திப்பட்டு - கோலடி சாலையில், உரிய ஆவணங்கள், உரிமம் இல்லாமல், ஆறு டன் சவுடு மண் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர்.விசாரணையில், மண் ஏற்றிச் சென்றது, விழுப்புரம் மாவட்டம், வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 40, என்பதும், திருவேற்காடு, அயனம்பாக்கத்தில் இருந்து மண் ஏற்றி வந்ததும் தெரிந்தது.வருவாய்த் துறையினர், லாரியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தாசில்தார் அறிவுறுத்தலின்படி, ஆவடி போலீசார் ரமேஷை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை