மேலும் செய்திகள்
அண்ணா பல்கலை மாணவியை மிரட்டிய 'மாஜி' காதலன் கைது
29-Jun-2025
திருவொற்றியூர், திருவொற்றியூரைச் சேர்ந்த, 19 வயது கல்லுாரி மாணவியும் முகமது அப்சல் என்ற ஆகாஷ், 21, என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.அப்போது, ஆகாஷ், பெண்ணிடம் பல முறை பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் எழவே, அப்பெண் அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.இந்நிலையில், காதலிக்கும் போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாகவும், அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமானால், இரண்டு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனவும், ஆகாஷ் மிரட்டியுள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட அப்பெண், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
29-Jun-2025