உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.டி., ஊழியரிடம் பணம் பறிப்பு

ஐ.டி., ஊழியரிடம் பணம் பறிப்பு

வடபழனி:ஐ.டி., ஊழியரிடம் பணம் பறித்த திருநங்கையர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மதுகர் புஷ்ப், 35. ஐ.டி., ஊழியர். பணி நிமித்தமாக சென்னை வந்த மதுகர் புஷ்ப், இரண்டு நாட்களாக வடபழனி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஹோட்டல் முன் சாலையில் நின்றிருந்தபோது, அங்கு வந்த திருநங்கையர் இருவர் பணம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு பணம் கொடுக்க பாக்கெட்டில், இருந்து மணி பர்சை எடுத்தபோது, திருநங்கையர் அதை பறித்துக் கொண்டனர். ஆசிர்வாதம் செய்து தருவதாக கூறி, பர்சில் இருந்த 8,500 ரூபாயை பறித்து தப்பினர். இது குறித்து வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை