உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்டலுாரில் தப்பிய குரங்குகள் ஓட்டேரியில் பதிவு

வண்டலுாரில் தப்பிய குரங்குகள் ஓட்டேரியில் பதிவு

தாம்பரம், உ.பி., மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, சமீபத்தில் கொண்டு வரப்பட்டன. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு அனுமன் குரங்குகள், பிப்., 13ம் தேதி தப்பித்து, காட்டுப்பகுதிக்கு சென்றன. இதையடுத்து, மூவர் குழு அமைக்கப்பட்டு, தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த குரங்குகள் ஓட்டேரி விரிவு குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஒரு குரங்கு அமர்ந்திருப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை