உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி கிரிக்கெட்டில் முதலிடம்

எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி கிரிக்கெட்டில் முதலிடம்

சென்னை:சென்னை பல்கலையில் உள்ள கல்லுாரிகள், மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, துரைப்பாக்கம், டி.பி.ஜெயின் கல்லுாரியில் நடத்தப்பட்டது.இதில், பெண்கள் பிரிவு இறுதி போட்டியில், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணியுடன் சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல கூட்டு அணி மோதியது.முதலில் ஆடிய வைஷ்ணவ் அணி வீராங்கனையர், நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்தனர்.எதிர் அணி, ஆறு விக்கெட் இழப்புக்கு 60 ரன் மட்டுமே எடுத்தனர். இதனால், 34 ரன் வித்தியாசத்தில் எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ