உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்டலத்தில் குப்பை பிரச்னை தீர்ப்பதில் மாநகராட்சி சுணக்கம்

மண்டலத்தில் குப்பை பிரச்னை தீர்ப்பதில் மாநகராட்சி சுணக்கம்

குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்களிலும் குப்பை எடுக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில், இரண்டாவது மண்டலத்தில் மட்டும், தினமும் 80 டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன. இந்த மண்டலத்தில் குப்பை கொட்ட போதிய இடவசதி இல்லை. அதனால் அனகாபுத்துாரில், தனியார் இடத்தில் கொட்டினர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த இடம் கைவிடப்பட்டது.பின், கன்னடப்பாளையத்தில் கொட்டினர். அங்கு மலை போல் தேங்கி, நான்காவது மண்டல கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, குப்பை கொட்டுவது கைவிடப்பட்டது.தற்போது, பம்மல் விஸ்வேசபுரம் கிடங்கில் கொட்டி வருகின்றனர். அங்கும் மலைப்போல் குப்பை தேங்கியுள்ளது. இதற்கு, கிடங்கில் தேங்கும் குப்பையை உடனுக்குடன், கொளத்துாருக்கு எடுத்து செல்ல, நிர்வாகம் தீவிரம் காட்டாததே காரணமாகும்.இதனால், குப்பை கொட்ட இடமில்லாமல், இரண்டாவது மண்டலத்தில் குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.தினசரி, 10 வாகனங்களில் குப்பை எடுத்து சென்றால், விஸ்வேசபுரத்தில் ஐந்து வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கின்றனர். மற்ற ஐந்து வாகனங்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். அந்த வாகனங்கள் குப்பையோடு, நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால், வார்டுகளில் குப்பை தேங்கி, நாற்றம் அடிக்கிறது. பொதுமக்களுக்கு பதில் கூற முடியாமல் கவுன்சிலர்கள் தவிக்கின்றனர். இப்பிரச்னை தொடர்ந்து நீடிப்பதால், இரண்டாவது மண்டலத்தில் திரும்பிய இடமெல்லாம் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.உயர் அதிகாரிகள் தலையிட்டு, குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை