| ADDED : ஜூலை 24, 2011 03:34 AM
குன்றத்தூர்:மாங்காடு முத்துக் குமரன் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜியில்,
மாணவர்களுக்கான இன்டர்வியூ பயிற்சி, நேற்று அளிக்கப்பட்டது.பொறியியல்
படிப்பு முடித்துவிட்டு, தனியார் நிறுவனங்களில் இன்டர்வியூ செல்லும்
மாணவர்கள், அதை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து விளக்குவதற்காக,
மாங்காடு முத்துக்குமரன் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜியில், தேசிய அளவிலான
சிறப்புப் பயிற்சி, நேற்று அளிக்கப்பட்டது.பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் பொது
மேலாளர் ராஜாமோகன், பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர்
சங்கரநாராயணன், எலக்ட்ரிக்கல் துறை தலைவர் முருகன் உட்பட, பலர் கலந்து
கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.ஆப்டிட்யூட் டெஸ்ட், கூட்டு
கலந்தாய்வு, ஹெச்.ஆர்., இன்டர்வியூ ஆகியவை குறித்து விளக்கம்
அளிக்கப்பட்டது. 15க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களிலிருந்து, மனிதவள
மேம்பாட்டு துறை அதிகாரிகளும், தொழிற்சாலை பிரபலங்களும், மாணவர்களின்
சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.