உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மர்ம காய்ச்சல்: குழந்தை பலி

மர்ம காய்ச்சல்: குழந்தை பலி

ஆவடி: ஆவடியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ௧ வயது பெண் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர், 40; தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி சுகன்யா, 31. தம்பதியின் 1 வயது மகள் அனன்யாவிற்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. பெற்றோர் அருகில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்தபோது, காய்ச்சல் சரியானது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென குழந்தைக்கு காய்ச்சல் அதிகமானது. சுகன்யா, குழந்தையை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிய வந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை