உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிருஷ்ணன் லீலையை சுட்டிக்காட்டிய நந்தினி சுரேஷ் நடன குழுவினர்

கிருஷ்ணன் லீலையை சுட்டிக்காட்டிய நந்தினி சுரேஷ் நடன குழுவினர்

கிருஷ்ணரின் சிறுவயது லீலைகளை, பால பருவ குழந்தைகளை கொண்டு, திருவான்மியூர் பாலபவன் ஹாலில், 'பாலகோபால நாட்டிய நாடகம்' குழுவினர், கண்ணனை போற்றிப்பாட துவங்கினர்.பாலகர்களும், கோபியர்களும் மகிழ்ந்து ஆடி பாட, வாத்தியங்கள் முழங்க கண்ணின் திலக அழகை கூறி அபிநயம் பிடித்தனர்.கண்ணனாக அலங்காரம் தரித்த அனைவரும் ஒன்றிணைந்து ஆடிய நடனம், நம் கண்ணை விட்டு அகலவில்லை.காட்சி ஒன்றில், பிருந்தாவன பாலகர்களோடு கண்ணன் விளையாடி கொண்டிருக்க, அசுரபாம்பு தன் மாய வலையை விரிக்க வாயினுள் சிக்கிய நண்பர்களை மீட்ட காட்சி இடம்பெற்றிருந்தது. இதில், அந்த பாம்பு போன்று குழுவினர் அமைந்திருந்தது அற்புதமாக இருந்தது.வெண்ணெய் திருடி மாட்டிக்கொண்ட கண்ணனை, 'யாரடா நீ' என வினவ, அவர் சொல்லும் பதில்களால், அரங்கில் சிரிப்பலை எழுந்தது. ஒவ்வொரு காட்சியின் முடிவுகளையும் உறுதி செய்வதற்கு, ஜதிகளோடு ஆரம்பித்தன கதை களங்கள்.கோபியர்களோடு குறும்புகள் செய்துவிட்டு, தன் தாயிடம் கோபியர்களே காரணம் என்று கூறி நம்ப வைக்கும் அனைத்து கண்ணன் கதாபாத்திரங்களும், சுட்டித்தனமும் வேட்டிக்கையும் மிகுந்ததாக அமைந்திருந்தது.'என்னவென்று சொல்வேனடி, இல்லை இல்லை அம்மா, தொட்டு தொட்டு பேச வர்றான்' என்பது போல், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல்களை மையமாக கொண்டு, அற்புதமாக நடன அமைப்பை வழங்கியிருந்தார் நந்தினி சுரேஷ். இவரது குழுவினர் தான், இதை நிகழ்த்தியது. கிருஷ்ண லீலைகளில் திளைக்கச் செய்து, அனைவருக்கும் நன்றி கூறி கச்சேரியை முடித்தனர்.- மா.அன்புக்கரசி,ஈரோடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை