உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தேசிய சப்- ஜூனியர் வளையப்பந்து தமிழக அணிகள் தொடர் சாதனை

 தேசிய சப்- ஜூனியர் வளையப்பந்து தமிழக அணிகள் தொடர் சாதனை

சென்னை: தேசிய சப் - ஜூனியர் வளையப்பந்து போட்டியில், தமிழக அணிகள் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக 'சாம்பியன்' பட்டத்தை தக்க வைத்துள்ளது. கேரளா மாநில வளையப்பந்து கழகம் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு இணைந்து, 37வது சப் - ஜூனியர் தேசிய வளையப்பந்து போட்டி, கேரள மாநிலம், பையனுாரில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 16க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. குழு போட்டியாகவும், தனிநபர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் இப்போட்டிகள் நடந்தன. குழு போட்டியில் கேரளா அணியை எதிர்கொண்ட தமிழக மாணவர்கள் அணி, 3 -- 2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றது. பாண்டிச்சேரி அணியை எதிர்கொண்ட தமிழக மாணவியர் அணி, 0- - 3 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. தனிநபர் போட்டிகளில், மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில், தமிழகத்தின் ஜோயல், 14, தங்கப்பதக்கத்தையும், சூரஜ் கோசன் ஜாய், 14, வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். தனிநபர் மாணவியருக்கான ஒற்றையர் பிரிவில், தமிழக அணியை சேர்ந்த அஸ்மிதா, 13, வெள்ளியும், சவுபர்ணிகா, 13, வெண்கல பதக்கமும் கைப்பற்றினர். மாணவர் இரட்டையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த மைக்கேல் ஜெபஸ்டின், 13, மற்றும் சுதின், 14, ஆகியோர், 0 - 2 புள்ளிக்கணக்கில் கேரள அணியிடம் தோற்று, இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். மாணவியருக்கான இரட்டையர் பிரிவில், தமிழக்தின் யுத்திகா, 14, மற்றும் கிருஷிதா, 13, ஆகியோர், பாண்டிச்சேரி அணியிடம் 0 - -2 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று, வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில், தமிழகத்தின் ஜீவசேகர், 14, மற்றும் இவாஞ்சலின் சைனி, 14, ஆகியோர், பாண்டிச்சேரி அணியிடம், 2- - 0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று நான்காம் இடம் பிடித்தனர். அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக வளையப்பந்து அணி, 34 புள்ளிக்கு, 26 புள்ளிகளை பெற்று, தொடர்ந்து எட்டாவது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ