உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவியின் கள்ளக்காதலனை வெட்ட முயன்றவருக்கு வலை

மனைவியின் கள்ளக்காதலனை வெட்ட முயன்றவருக்கு வலை

பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, கஜபதி தெருவைச் சேர்ந்தவர் கலைவாணன், 42. இவர், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மேனகா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.கடந்த 21ம் தேதி பட்டினப்பாக்கம், டுமில்குப்பம் டிமாண்டி தெருவில், மேனகாவை சந்திக்க கலைவாணன் காத்திருந்தார்.அப்போது அங்கு வந்த மேனகாவின் கணவர் பாலா, 47, அவரது கூட்டாளிகளான கிழக்கு கடற்கரை சாலையைச் சேர்ந்த மோதி பாபு, 46, கண்ணகி நகரைச் சேர்ந்த கயாஸ் சுதீன், 42, ஆகியோர், கலைவாணனிடம் தகராறு செய்து, கத்தியால் வெட்டிக் கொல்ல முயற்சித்தனர்.கலைவாணன் அங்கிருந்து தப்பித்து, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மோதி பாபு, கயாஸ் சுதீன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பாலா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை