மேலும் செய்திகள்
மாநகராட்சி ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது
12-Aug-2025
வழிப்பறி திருடர்கள் இருவர் பிடிபட்டனர் திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலையைச் சேர்ந்தவர் வினோத், 32; கொத்தனார். கடந்த 26ம் தேதி காலை, டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு அருகே, இவரிடம் கத்திமுனையில், 3,000 ரூபாயை மர்ம நபர்கள் பறித்து தப்பினர். ஐஸ்ஹவுஸ் போலீசாரின் விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விமலநாதன், 34, கார்த்திக், 35, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெண்கள் விடுதியில் புகுந்த நபரால் பரபரப்பு ராமாபுரம், பூத்தப்பேடு பிரதான சாலையில் உள்ள பெண்கள் விடுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். விடுதியில் தங்கியுள்ள பெண் ஒருவர் கூச்சலிடவே, அந்த நபர் பக்கத்தில் உள்ள கட்டடத்தின் மாடிக்கு தாவி குதிக்க முயன்றுள்ளார். இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். ராமாபுரம் போலீசார் அவரை, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிடிபட்ட நபர், வெடங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்த கார்த்திக், 36, என்பதும், அளவிற்கு அதிகமான மது போதையில் தெரியாமல் விடுதியில் புகுந்தது தெரிய வந்தது. மருந்து கடையில் பணம் பறித்தவர் கைது ஆயிரம்விளக்கு, மக்கீஸ் கார்டன் பகுதியில் மருந்து கடை வைத்துள்ளவர் காமராஜ், 76. கடந்த 25ம் தேதி இரவு அவரது தம்பி கருணாநிதி கடையில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த இருவர், கருணாநிதியை கத்தியை காட்டி மிரட்டி, 1,500 ரூபாய் பறித்துச் சென்றனர். விசாரித்த ஆயிரம்விளக்கு போலீசார், பணம் பறித்துச் சென்ற மதுரையைச் சேர்ந்த ஆதித்யா, 19, என்பவரை நேற்று கைது செய்தனர்; தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனம் திருடி வந்த ஆதித்யா, பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 88 போலீசார் பணியிட மாற்றம் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள், முதல் நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர் என 88 போலீசாரை, பணி இடமாற்றம் செய்து, கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இதில், 20 போலீசார் புதிதாக துவக்கப்பட உள்ள அயப்பாக்கம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வீட்டை கேட்டு கணவருக்கு அடி உதை வியாசர்பாடி மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரா, 50. இவரது மகன் இளங்கோ, 30. மருமகள் ஜெயலட்சுமி. கடந்த மூன்று ஆண்டுகளாக இளங்கோவும் ஜெயலட்சுமியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 24ம் தேதி இரவு ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர், சந்திரா பெயரில் உள்ள வீட்டை தங்களுக்கு எழுதி தரும்படி கேட்டு சந்திரா மற்றும் இளங்கோவை தாக்கி உள்ளனர். இது குறித்து செம்பியம் விசாரித்த செம்பியம் போலீசார் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த யுவராஜ், 33, வீரமணி, 27 ஆகியோரை நேற்று கைது செய்தனர். ஜெயலட்சுமி உட்பட மூவரை தேடி வருகின்றனர்.
12-Aug-2025