உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நொளம்பூர் மழைநீர் கால்வாயில் ஆறாக ஓடும் கழிவுநீரால் சீர்கேடு

 நொளம்பூர் மழைநீர் கால்வாயில் ஆறாக ஓடும் கழிவுநீரால் சீர்கேடு

நொளம்பூர்: நொளம்பூரில் உள்ள மழைநீர் வடிகால்வாயில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. வளசரவாக்கம் மண்டலம், 143வது வார்டு நொளம்பூர், மேற்கு முகப்பேர் பிரதான சாலையில் நொளம்பூர் கால்வாய் துவங்கி, ஐந்தாவது பிளாக் வழியாக கூவம் ஆற்றில் கலக்கிறது. இந்த கால்வாயுடன், அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள் இணைக்கப்பட்டு உள்ளன. நொளம்பூரில் 40க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன; புதிதாக பல குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு போதிய கழிவுநீர் கட்டமைப்பு இல்லாததால், மழைநீர் வடிகால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நொளம்பூரை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும் வடிகால்வாயில் கலந்து, கழிவுநீராக மாறி வருகிறது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வேண்டிய வடிகால்வாயில், ஆண்டு முழுதும் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில், கொசு தொல்லை அதிகரித்துள்ளது; தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. சட்டவிரோத கழிவுநீர் இணைப்பை அகற்றி, கால்வாயில் மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி