உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீ விபத்து வடமாநில தொழிலாளி பலி

தீ விபத்து வடமாநில தொழிலாளி பலி

செங்குன்றம்,:செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், ரோஸ் நகரில் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. அதில், 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை, 'போகி' பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, தொழிற்சாலையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளில், தீ பிடித்து எரிந்தது.அப்போது, தொழிற்சாலையில் உள்ள கழிப்பறைக்கு சென்றிருந்த பீகாரை சேர்ந்த தொழிலாளி மித்ரா ரவிதாஸ், 27, தீயில் சிக்கி தப்பிக்க வழியின்றி பலியானார்.தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், தொழிலாளியின் உடலை மீட்டனர். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை