உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வீடு புகுந்து கைவரிசை வடமாநில கும்பல் கைது

 வீடு புகுந்து கைவரிசை வடமாநில கும்பல் கைது

சென்னை: கொளத்துார், பூம்புகார் நகரில் மகளுடன் வசிக்கிறார் ராஜசேகர், 55. வீட்டின் அருகே, மகள் நடத்தும் ஹோட்டலில் பணிபுரிந்துவந்த மும்பையைச் சேர்ந்த ஆகாஷ், 30, என்பவர், சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றார். ஊருக்கு செல்லும் முன், ராஜசேகர் வீட்டின் சாவியை திருடிச் சென்றார். மாற்று சாவியை பயன்படுத்திய ராஜசேகர், இம்மாதம் 10ம் தேதி குடும்பத்தினருடன் வெளியில் சென்றபோது, இவரது வீடு புகுந்து 3 சவரன் நகை, 15,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சென்னைக்கு ஆகாஷ் நேற்று திரும்பியதை அறிந்த போலீசார், அவரை பிடித்தனர். விசாரணையில், திருட்டு சாவியை தன் கூட்டாளிகளான ஆதேஷ், சபீனா, 32, ஆகியோரிடம் கொடுத்து நகையை திருடியது தெரிந்தது. மூவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி