உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆபாச நடன நிகழ்ச்சி: மூவர் கைது

ஆபாச நடன நிகழ்ச்சி: மூவர் கைது

எம்.ஜி.ஆர்., நகர், ஜாபர்கான்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக, கடந்த 4ம் தேதி எம்.ஜி.ஆர்., நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, மதுக்கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், போலீசாரை தடுத்து மிரட்டினர். இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, அனுமதித்த நேரத்தை மீறி மதுக்கூடம் நடத்தி, ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மதுக்கூட உரிமையாளர் முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தாணு, 47, காசாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மதுரவாயலைச் சேர்ந்த வினோத், 39, ஆகிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், தாணு மீது ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக, நான்கு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த தாணு, மீண்டும் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை