உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராமதாஸ் பற்றி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு

ராமதாஸ் பற்றி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு

சென்னை: 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை' என்று சொன்னதற்காக, முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, தமிழகம் முழுதும் பா.ம.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள விவகாரத்தில், தமிழக மின்வாரியத்தின் பெயரும் இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

தடுக்க முடியாது

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் அறிக்கை வெளியிடுகிறார். அதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.இது, பா.ம.க.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல், பா.ம.க., தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவதை தடுக்க முடியாது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, நா.த.க., தலைவர் சீமான், த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, தமிழகம் முழுதும் நேற்று, பா.ம.க., தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய, மத்திய மாவட்ட பா.ம.க., செயலர் மோகன்ராம், ''ராமதாஸ் மீதான தரக்குறைவான விமர்சனத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது, ''பா.ம.க., மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் ராதாமணி, ''ஆளுங்கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று, நினைக்கிறார்களா... எங்க அய்யாவ பத்தி பேசினால், கத்தி எடுத்து வந்து வெட்டுவேன்,'' என, ஆவேசமாகப் பேசினார். தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில், அக்கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்.எல்.ஏ., சிவகுமார் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீஸ் தடுப்பை மீறி உள்ளே சென்று கோஷமிட்டனர். 'முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால், விழுப்புரத்தில் நடக்கவுள்ள விழாவில் பங்கேற்க விட மாட்டோம்' என்றனர்.திருப்பத்துார், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களிலும், பல மாவட்டங்களிலும் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் ஆவேசம்

அரியலுாரில் பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், “வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டோர் நினைவு மண்டபத்தை, விழுப்புரத்தில் முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார். ''அதனால், வன்னியர்களுக்கு முதல்வர் மீது மதிப்பு உயர்வதை பொறுக்க முடியாமல் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்,” என்றார்.''ராமதாஸ் தான் அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவார். முதல்வர் எந்த விதத்திலும் அவரை குறைத்து பேசி விடவில்லை. எனவே, முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசுவதை, உடனடியாக அன்பு மணி நிறுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றும் கூறினார். ''மன்னிப்பு கேட்கும் வழக்கமே, தி.மு.க.,வினருக்கு கிடையாது,” என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஆவேசமாக பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 20:26

பா ம க வின் மகளிர் அணித் தலைவி, "எங்க அய்யாவ பத்தி பேசினால், கத்தி எடுத்து வந்து வெட்டுவேன், என, ஆவேசமாகப் பேசினார். ராமதாசின் சொந்த மருமகள் சவுமியா கூட வீட்டில் உக்காந்து டி வி பாத்துண்டிருக்கார். இந்த பெண்மணி ஏன் இவ்வளவு கூவுகிறார்? இவரை யாரும் கண்டிக்க மாட்டார்களோ?


Oviya Vijay
நவ 27, 2024 16:36

பெரிய மாங்காவுக்கு எல்லாம் இவ்ளோ சீன் வேண்டியது இல்லை. அதுவும் தலைப்பு செய்தியா...


Matt P
நவ 27, 2024 14:15

அவரு பேசினது சரியோ இல்லையோ அதுக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக போராட்டம் நடத்துவது சரியில்லை. நேரடி பதில் சொல்ல முடியில்ல என்றால் இப்படி எடக்கு மடக்கா தான் பதிலளிப்பார்கள். பதில் சொல்வதற்கும் சிந்தனை திறன் வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 12:55

அடுத்த அமர்க்களமா??


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 12:50

யார் கண்டிக்கப் போகிறீர்கள்?


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 12:48

இந்த ராமதாஸ் சில மாதங்களுக்கு முன்பு, "உன்னை கோட்டையில் வந்து நான் பாக்கணுமா? எனக்கு அவமானமா இருக்கு என்று சாதியம் பேசினார். 10.5% உங்கப்பன் வீட்டு சொத்தா? என்றார். அப்போ முதல்வர் பெருந்தன்மையாக அதை மன்னித்தார். இப்பவும் அவமரியாதையாக எதுவும் ஒருமையிலோ, சாதி ரீதியாகவோ முதல்வர் எதுவும் பேசவில்லையே? எத்தை தின்னா பித்தம் தெளியும் என்று அலையும் சிலர் தான் இதை அரசியல் ஆக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.


ponssasi
நவ 27, 2024 12:13

முதல்வரின் பேச்சு வருத்தத்திற்குரியது, ராமதாஸ் கொள்கைகளில் உடன்பாடிலாதவன் நான், ஆனால் அவரின் அறம் மெச்சத்தகுந்தது. சமரசம் இல்லாமல் தான் சார்ந்த சமுதாய உயர்வுக்கு பாடுபடுகிறார். அவர் கட்சி நடத்தும் தொலைக்காட்சி ஆன்மிகம், கல்வி, மருத்துவம், விவசாயம், பாரம்பரிய கலை நிகழ்வுகள் இவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும். இவைகளை நீங்கள் எந்த தலைவரிடமும் பார்க்கமுடியாதது. மற்ற கட்சி நடத்தும் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் நம் வளரும் தலைமுறையை சீரழித்துவிடும். ஸ்டாலின் கண்ணியமாக கடமைப்பட்டவர் மூத்த அமைச்சர்களாவது அவருக்கு புரியவைக்க வேண்டும். மன்னிப்புக்கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என அமைச்சர் சொல்லுகிறார், நீங்கள் எந்த படுபாதக செயலை செய்தாலும் கலங்காது செய்பவர் உங்களிடம் எப்படி அந்த வார்த்தை நாவில் வரும்.


krishna
நவ 27, 2024 11:53

PONA POGUDHU VIDUNGAPPA.IDHU ONNUDHAAN THUNDU SEATTU ILLAMA SONBARU.CHOICELA VIDUNGAPPA.


R.PERUMALRAJA
நவ 27, 2024 11:18

சென்னையில், மக்கள் பணத்தில், கார் பந்தயம் நடத்தியதும் தேவை இல்லாத வேலை என்று ப ம க வினர் போராட்ட களங்களில் பதாகைகள் ஏந்தி செல்வதாக செய்தி .


R.PERUMALRAJA
நவ 27, 2024 11:11

தேவை இல்லாத வேலை