உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் வைக்க உத்தரவு

கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் வைக்க உத்தரவு

சென்னை : சென்னையில் உள்ள தனியார் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும் விளக்க உரையும் அமைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பழனி வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும், அதற்கான விளக்கு உரையும் எழுத வேண்டும் என, கடந்த மார்ச் 24ம் தேதி ஆணை வெளியிடப்பட்டது.அரசாணை அறிவுறுத்தலின்படி, திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில், அதற்கான பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன் பெறும் வகையிலும் காட்சிப்படுத்த வேண்டும்.இதை அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gopalakrishnan Thiagarajan
மே 16, 2025 23:03

பாழும் நெற்றியுடன் திருவள்ளுவ பெருந்தகை.பார்க்க பாவமாக இருக்கிறது.


ஆரூர் ரங்
மே 16, 2025 19:53

டாஸ்மாக் கடை , பார்களில் கள்ளுண்ணாமை அதிகாரத்தை எழுதி வைக்கலாம்.


ஆரூர் ரங்
மே 16, 2025 19:51

கறிக்கடை, பிரியாணிக் கடைகளில் புலால் மறுத்தல் · அதிகாரத்தை எழுதி வைக்கலாம்.


Veeraa
மே 16, 2025 09:15

In Muslim shops too? We know about this Dravidiaa Government.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை