மேலும் செய்திகள்
ரூ.10 கோடி மோசடி வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்
08-Apr-2025
ஆவடி, ஏப். 16-திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அசிக் அலி, 32. ஆவடி வசந்தம் நகரில், 'பைன் யாத்ரா டூர் அண்ட் டிராவல்ஸ்' என்ற பெயரில், டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரிடம், காஞ்சிபுரம் மாவட்டம், மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த அதியமான்,59 என்பவர், கேரளா மாநிலம் ஆழப்புழாவிற்கு சுற்றுலா செல்ல, கடந்த 2023ம் ஆண்டு, 1.35 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.பின், 2024ம் ஆண்டு பாங்காக் செல்ல, விமான டிக்கெட்-டுக்கு, வங்கி மற்றும் ஆன்லைன் பணபரிவர்த்தையில், 7.40 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அசிக் அலி, போலியான விமான டிக்கெட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.அதியமான் உடல்நல குறைவால் இறந்துவிட்ட நிலையில் இது குறித்து அவரது மனைவி வசந்தா, 55 என்பவர், ஆவடி குற்றப்பிரிவில் கடந்த 12ம் தேதி புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, அசிக் அலியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
08-Apr-2025