உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மக்களுடன் முதல்வர் முகாம் ஆவடி மாநகராட்சியில் துவக்கம்

மக்களுடன் முதல்வர் முகாம் ஆவடி மாநகராட்சியில் துவக்கம்

ஆவடி, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 1, 2, 3 மற்றும் 4வது வார்டு மக்களுக்கான 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி, ஆவடி, மிட்டனமல்லி சமூக நலக் கூடத்தில் நேற்று நடந்தது. ஜன., 23 வரை 13 நாட்கள், ஆவடி மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. நேற்று நடந்த முகாமில் வருவாய்த்துறை, மாநகராட்சி, மின்சார துறை, காவல்துறை, வீட்டு வசதி வாரியம், மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட ஒன்பது துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து 161 கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், ஆவடி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படாததால், முதல் நாளான நேற்று நான்கு வார்டுகள் சேர்த்து மிக குறைந்த மனுக்கள் மட்டும் பெறப்பட்டன. நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை