வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொருத்தமற்ற விளம்பரங்களை தயவு கூர்ந்து தடை செய்யவும்.
பூந்தமல்லி ?:பூந்தமல்லியில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில், 1893ல் திறக்கப்பட்ட விக்டரி மெமோரியல் கட்டடம் உள்ளது.ராணுவ வீரர்கள், குதிரைகள் தங்கும் அறைகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத தளவாட பொருட்கள் பாதுகாத்து வைக்கும் இடமாக, இந்த கட்டடம் செயல்பட்டது.செங்கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம், 5,500 சதுர அடியில் பரந்து விரிந்து, பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.முதல் உலகப்போர் வெற்றியின் நினைவாக, விக்டரி மெமோரியல் கட்டடம், பார்வையற்றோர் பள்ளியாக, 1931ம் ஆண்டு மாற்றப்பட்டது. தற்போது, தமிழக மாற்றுத்திறனாளிகள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கட்டடம், 135 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது. தற்போது பராமரிப்பின்றி உள்ளது. கட்டடத்தின் மீது, பல இடங்களில் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, கட்டடத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி கூறியதாவது:பாரம்பரியமிக்க இந்த கட்டடத்தை, 24.20 கோடி ரூபாய் மதிப்பில், சீரமைக்கும் பணிகள், ஜனவரி 27ல் துவங்க உள்ளன.கட்டடத்தின் கூரை, கதவு, ஜன்னல், துாண்களை சீரமைத்து, முழு கட்டடத்தையும் பலப்படுத்த உள்ளோம். இரண்டு ஆண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமற்ற விளம்பரங்களை தயவு கூர்ந்து தடை செய்யவும்.