உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.3 லட்சம் மதிப்பு பொருள் சமூகநலக்கூடத்தில் திருட்டு

ரூ.3 லட்சம் மதிப்பு பொருள் சமூகநலக்கூடத்தில் திருட்டு

கே.கே., நகர், சாலிகிராமத்தில், சமூகநலக்கூடத்தின் கதவை உடைத்து, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சாலிகிராமம் 80 அடி சாலை விஜயராகவபுரம் சந்திப்பில், மாநகராட்சி சமூகநலக்கூடம் உள்ளது. கடந்த 2ம் தேதி சமூக நலக்கூடத்தை, துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து, பூட்டி விட்டுச் சென்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் சென்று பார்த்த போது, சமூகநலக்கூடத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் இருந்த மின் விசிறிகள், மின்விளக்குகள், தண்ணீர் குழாய் என, 2.97 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்து 136வது வார்டு உதவி பொறியாளர் கவிதா அளித்த புகாரின்படி, கே.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்