சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்தவருக்கு காப்பு
சென்னை: சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்தவர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார். வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 5 வயது சிறுமி. பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், தன் தாத்தா - பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், எதிர்வீட்டில் வசிக்கும் நபர், நேற்று மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம், அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாச சைகை காண்பித்துள்ளார். மேலும், கையில் 100 ரூபாயை வைத்துக்கொண்டு சிறுமியை, இங்கே வா என அழைத்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த போலீசார், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் சத்யா, 55, என்பவரை கைது செய்தனர்.