| ADDED : பிப் 23, 2024 12:06 AM
சென்னை, ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா, சென்னை ஐ.சி.எப்., ஆலையை நேற்று ஆய்வு செய்தார். பின், ஐ.சி.எப்., பொதுமேலாளர் சுப்பா ராவ், இதர துறைத் தலைவர்கள் மற்றும் ஐ.சி.எப்., ஊழியர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.தொடர்ந்து, ஐ.சி.எப்., பர்னிஷிங் பகுதியில் தயாரிப்பில் உள்ள 'வந்தே மெட்ரோ' மற்றும் 'வந்தே பாரத்' ரயில்களுக்கான ரயில் பெட்டிகளை அவர் பார்வையிட்டார்.வந்தே மெட்ரோ ரயிலில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகளை வாழ்த்திச் சென்றார். அதன்பின், அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியருக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, பயணியரிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் இதர கோட்ட மேலாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ரயில்களின் இயக்கத்தை துல்லியமாக கண்காணிக்கும் வகையில், புதிய சிக்னல் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்தார்.