உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரேஷன் கடை பெண் ஊழியர் வாகனம் திருட்டு

ரேஷன் கடை பெண் ஊழியர் வாகனம் திருட்டு

ஆதம்பாக்கம்,பொங்கல் டோக்கன் வழங்க சென்ற ரேஷன் கடை பெண் ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிய முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம், 3வது தெருவில் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் கடந்த, 7ம் தேதி விநியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர் லலிதா, 44 என்பவர் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பொது மக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தார். அப்போது, லலிதாவின் இருசக்கர வாகனம் திருடுபோனது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, திருடு போன பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். இதில், முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை