உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இறந்ததாக நீக்கிய வாக்காளர்கள் பட்டியலில் மீண்டும் சேர்ப்பு

 இறந்ததாக நீக்கிய வாக்காளர்கள் பட்டியலில் மீண்டும் சேர்ப்பு

அமைந்தகரை: நமது நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, இறந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களின் விபரங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டன. எஸ்.ஐ.ஆர்., எனும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், மாநிலம் முழுதும் நடக்கின்றன. அதன்படி, வீடு வீடாக சென்று, படிவங்கள் வழங்கி, பின் பூர்த்தி செய்யப்பட்டு, டிச., 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில், தமிழகத்தில் மட்டும் 94 லட்சம் வாக்காளர்கள், பெயர், முகவரி மாறியவர்களின் அடிப்படையில் நீக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை அண்ணா நகர் தொகுதியில், 101வது வார்டு அமைந்தகரை, கதிரவன் காலனி 85வது பாகத்தை ஆய்வு செய்தபோது, உயிரோடு இருக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் இறந்ததாக, பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இதனால் அவர்கள், இம்மாதம் 8ம் தேதி, அண்ணா நகர் மண்டல அலுவலகத்தை நேரடியாக அணுகி முறையிட்டனர். இதுகுறித்து நம் நாளி தழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இறந்ததாக நீக்கப்பட்ட, 30க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ