உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஓதியூரில் ஆண் சடலம் மீட்பு

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஓதியூரில் ஆண் சடலம் மீட்பு

செய்யூர், செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில், மாதா குளம் அருகே, கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது.சம்பவ இடத்தில் கிடந்த மொபைல் போன் மற்றும் அடையாள அட்டைகளை கைப்பற்றி, போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட நபர், திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் சரஸ்வதி நகர், 4வது தெருவைச் சார்ந்த சோழராஜன், 40, என்பது தெரிய வந்துள்ளது. கொலையாளிகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

நிர்வாணமாக ஆண் சடலம்

கோயம்பேடு காவல் நிலையம் அருகே தனியார் வாகனங்கள் நிறுத்தும் காலி இடம் உள்ளது. இந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதியினர் பார்த்த போது நிர்வாணமாக உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சடலத்தை மீட்டு கோயம்பேடு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தது 35 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், இறந்து நான்கு நாட்கள் மேல் ஆகியிருக்கலாம் என, தெரியவந்தது. அவரது மர்ம மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை