உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காவல் துறையின் சிசிடிவி கேமரா டெண்டருக்கு தடை விதிக்க மறுப்பு

 காவல் துறையின் சிசிடிவி கேமரா டெண்டருக்கு தடை விதிக்க மறுப்பு

சென்னை: சென்னை காவல்துறையின், 'சிசிடி வி' கேமராக்கள் பொருத்தும் டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோபாலபுரத்தை சேர்ந்த, 'பேட்ரியா செக்யூரஸ் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, 5 கோடி ரூபாய்க்கான டெண்டர் அக்., 29ல் வெளியானது. ஐந்து முறை தொழில்நுட்ப விபரங்கள் மாற்றப்பட்டன. அதேபோல் மக்கள் கூடும் இடங்களில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கேமராக்கள் அமைப்பதில் உள்ள குறைபாடு களை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, போலீஸ் கமிஷனர் கண்டுகொள்ளவில்லை. எனவே, டெண்டரை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தர ப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுரேஷ்குமார், அரசு வழக்கறிஞர் முகமது சாதிக் ஆகியோர் ஆஜராகி, ''டெண்டருக்கான அவகாசம் டிச., 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் திருத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஏலதாரர்களுக்கு ஒருவார அவகாசம் தரப்பட்டுள்ளது,'' என்ற னர். இதையடுத்து, டெண்டர் நடைமுறைகளுக்கு இடைகால தடையேதும் விதிக்காமல், விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை