உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முக சிதைவால் பாதித்த சிறுவனுக்கு மறுவாழ்வு

முக சிதைவால் பாதித்த சிறுவனுக்கு மறுவாழ்வு

சென்னை, அரிய வகை கபாலமுக குறைபாடான முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: 'கபாலமுக குறைபாடு' என்ற முக சிதைவு நோய், 2,500 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது. மண்டை ஓட்டின் ஓரிரு எலும்புகள் ஒட்டிக்கொள்வதால், அதன் இயல்பான வளர்ச்சியை தடுக்கிறது. மேலும், இயல்பற்ற தலை மற்றும் முக வடிவமைப்பு, மூளையை அழுத்துவதால் மூக்கு, கண் உள்ளிட்டவற்றில் பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. மருத்துவமனையின் முதுநிலை டாக்டர்கள் மணிகண்டன், பாலமுரளி தலைமையிலான மருத்துவ குழுவினர், அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை வாயிலாக, முக சிதைவை சரி செய்தனர். தற்போது, சிறுவன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை