உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாசர் நகர் சாலையை சீரமைக்க கோரிக்கை

வியாசர் நகர் சாலையை சீரமைக்க கோரிக்கை

பெரம்பூர், வியாசர் நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. கடந்த மழையின்போது இச்சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் பெய்த மழையில், மேலும் சேதமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர்.ஏற்கனவே கொட்டப்பட்ட மணல், மழையால் சேறும் சகதியுமாகி, சாலை மேடு பள்ளமாக மாறி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.அதேபோல், 71வது வட்டம் கோவிந்தன் தெரு, போலேரி அம்மன் கோவில், எலிகான் தெரு உள்ளிட்ட தெருக்கள் குண்டும் குழியுமாக இருப்பதுடன், அதிகளவு இருசக்கர வாகனங்கள் இச்சாலைகளை பயன்படுத்துவதால் வேகத்தடை அமைக்கவும் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி