உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

பூந்தமல்லி, பூந்தமல்லி, ராமானுஜம் கூடம் தெருவில், தனியார் மகளிர் விடுதியையொட்டிய குப்பை தொட்டியில் இருந்து, நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் யுவராணி, 33, என்பவர், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, குப்பை தொட்டியில் தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன, பெண் குழந்தை கிடந்தது.எறும்புகள் மொய்த்த நிலையில், வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து போயிருந்தது. குழந்தையை மீட்ட யுவராணி, பூந்தமல்லி அரசு மருத்துவமனையிலும், அதை தொடர்ந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சிகிச்சை அளித்தார். தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார், குழந்தை மீட்கப்பட்ட இடத்திற்கு சென்று, குழந்தையை வீசியது யார் என, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக விசாரித்து வருகின்றனர்.இரக்கமின்றி, குப்பை தொட்டியில் வீசப்பட்டு, உயிருக்கு போராடி மீண்ட குழந்தைக்கு, அதை மீட்ட யுவராணி, 'அதிர்ஷ்டலட்சுமி' என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்