உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  முன்பதிவு லாரி குடிநீர் விலை உயர்வு

 முன்பதிவு லாரி குடிநீர் விலை உயர்வு

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு, முன்பதிவு செய்து பெறப்படும் குடிநீர் லாரி நீரின் விலையை, சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில், தினசரி 106 கோடி லிட்டர் குடிநீரை, சென்னை குடிநீர் வாரியம், குழாய் வாயிலாக வினியோகித்து வருகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு தேவைப்படுவோர், முன்பதிவு செய்து கட்டண அடிப்படையில் குடிநீரை வாங்கி வருகின்றனர். அவர்களுக்கு தினமும், 1,000 லாரிகளில் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, முன்பதிவு லாரி தண்ணீரின் விலையை, சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது. அதன்படி, 6,000 மற்றும் 9,000 லிட்டர் லாரி தண்ணீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், 12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த விலையேற்றம், தேவைக்கு அதிகமாக வாங்குவோருக்காக தான். அதேநேரம், குடியிருப்புகள், தெரு தொட்டிகளுக்கு இலவசமாகவே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்' என்றனர். குடிநீர் கட்டண உயர்வை கைவிடணும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை தாகத்தில் தவிக்க விடும்விதமாக, லாரிகள் வாயிலாக வழங்கும் குடிநீருக்கான கட்டணத்தை, தி.மு.க., அரசு உயர்த்தியுள்ளது. இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. முறையான குடிநீர் இணைப்புகளை வழங்க இயலாத தி.மு.க., அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடிநீர் வாரியம் வாயிலாக வழங்கும் குடிநீரை நம்பியே தலைநகர் முழுதும் வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், எந்த ஒரு காரணமும் இன்றி குடிநீருக்கான கட்டணத்தை உயர்த்தியது மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும். எனவே, உடனே விலை உயர்வை தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டும். - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை