போதையில் பைக் ஓட்டிய இளைஞருக்கு ரூ.10,000
தாம்பரம்: மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனியில், நேற்று 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில், அதிவேகமாக சென்ற இளைஞர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். மேலும், அவ்வழியாக வந்த கார் மீதும் மோதி, தகராறில் ஈடுபட் டு உள்ளார்.தகவலறிந்து வந்த தாம்பரம் போலீசார், அந்த இளைஞரிடம் விசாரித்தபோது, மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சிவா, 27, என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து, மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.