| ADDED : நவ 25, 2025 04:48 AM
முகலிவாக்கம்: முகலிவாக்கத்தில் உள்ள பூங்காக்களில், பழுதடைந்த மின் கேபிள்கள் மற்றும் மின் விளக்குகள் மாற்ற, 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலந்துார் மண்டலம், 156வது வார்டு முகலிவாக்கத்தில், 20க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இதில் பல பூங்காக்களில், மின் கேபிள்கள் பழுதடைந்துள்ளன; விளக்குகளும் எரிவதில்லை. மின் விளக்கு பழுதை சரிசெய்ய, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பூங்காக்களின் விளக்குகளை சீரமைக்க, மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூங்காக்களில் சேதமடைந்த, 1,263 மீட்டர் மின் புதைவடம் 56, 30 வாட்ஸ் எல்.இ.டி., மின் விளக்குகள் 56, 15 வாட்ஸ் மின் விளக்குகள் உள்ளிட்டவற்றுக்கு, 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் துவக்கப்படும் என, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.