உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் திருட்டு ரூ.5 லட்சம் அபராதம்

மின்சாரம் திருட்டு ரூ.5 லட்சம் அபராதம்

சென்னை, தமிழக மின்வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், காஞ்சிபுரம், சுற்றுப்பகுதிகளில் சில நாட்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஆறு மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஈடுபட்டோரிடம் இருந்து இழப்பீட்டு தொகையாக, 5.67 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மின் திருட்டில் ஈடுபட்டோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, சமரசத் தொகையாக, 27,000 ரூபாயை கூடுதலாக செலுத்தியுள்ளனர்.மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை, சென்னை அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளரிடம், 94458 57591 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை