உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம்

சென்னை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.காலி பணியிடங்களை நிரம்புதல், ஒப்பந்த அடிப்படை முறையை கைவிடுதல், விடுபட்ட பணிப்பலன்களை வழங்குவது, கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். போராட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'நகராட்சி, மாநகராட்சியுடன், கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை