உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுஸ்வரா அறக்கட்டளை சார்பில் சங்கீத உத்சவம் கச்சேரி விழா

சுஸ்வரா அறக்கட்டளை சார்பில் சங்கீத உத்சவம் கச்சேரி விழா

மயிலாப்பூர், மயிலாப்பூர், பாரதி வித்யா பவனில் உள்ள ராமசாமி ராஜா அரங்கத்தில், சுஸ்வரா அறக்கட்டளை சார்பில், 35வது சங்கீத உத்சவ கச்சேரி நடக்கிறது.ஐந்தாவது நாளான நேற்று, வைஷ்ணவி ராமதாஸின் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது. வயலின் கயான்தேவ், மடிப்பாக்கம் சுரேஷின் மிருதங்கம், சுனில் குமாரின் கஞ்சிரா ஆகியவை, வாய்ப்பாட்டு கச்சேரிக்கு வலுசேர்த்தது.நிகழ்ச்சி குறித்து, சுஸ்வரா அறக்கட்டளை தலைவர் முரளிதரன் கூறியதாவது:சுஸ்வரா அறக்கட்டளை சார்பில், சங்கீத உத்ஸவம் கச்சேரி, இம்மாதம் 1ம் தேதியில் இருந்து நடக்கிறது. கடைசி நாள் நிகழ்ச்சியில், மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.அதை தொடர்ந்து வயலின், மிருதங்கம், கஞ்சிரா வாத்தியங்களில், வளரும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, அவர்களை ஒன்றிணைத்து 'ஜுகுல்பந்தி' கச்சேரி நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை