உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் 340 பேருக்கு உதவித்தொகை

சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் 340 பேருக்கு உதவித்தொகை

சென்னை சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கு தயாராகும் 340 பேருக்கு, மனிதநேய அறக்கட்டளை சார்பில், தலா 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.இது குறித்து, நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:மனிதநேய அறக்கட்டளை, 20 ஆண்டுகளாக, சமூக, பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கான சேவையை செய்கிறது. மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம், சிவில் சர்வீசஸ் தேர்வர்களுக்கும், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கிறது. இங்கு படித்து, 4,420க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய - மாநில அரசு பதவிகளை பெற்றுள்ளனர்.சமீபத்தில் நடந்த, யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு ஜூன் 11ல் வெளியானது. முதன்மை தேர்வுகள் ஆக., 22ல் துவங்குகின்றன. எங்கள் பயிற்சி மையத்தில் படித்து, முதன்மை தேர்வுக்கு தயாராகும் 340க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, தலா 15,000 ரூபாய் உதவித்தொகையை, முன்னாள் காவல் துறை அதிகாரி அலெக்சாண்டருடன் இணைந்து, நேற்று வழங்கினேன்.இருவரும், தேர்வர்களுக்கு ஊக்கமளித்ததுடன், நேர மேலாண்மை, உடல்நலம், மனநலம் குறித்து அறிவுறுத்தினோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை