உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்பாக்கம் ஏரி சீரமைப்பு கருத்து கேட்காததால் கொதிப்பு

செம்பாக்கம் ஏரி சீரமைப்பு கருத்து கேட்காததால் கொதிப்பு

செம்பாக்கம், தாம்பரம் மாநகராட்சி எல்லையில் உள்ள செம்பாக்கம் ஏரி, சி.எம்.டி.ஏ., நிதி, 10 கோடி ரூபாய் செலவில் மைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, கருத்துக் கேட்பு கூட்டம், சிட்லப்பாக்கம் சர்வமங்களா நகர் பூங்காவில், சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் பங்கேற்று, அப்பகுதியினர் கருத்து தெரிவித்தனர்.ஆனால், ஏரி இருக்கும் பகுதியான செம்பாக்கத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:செம்பாக்கத்தைச் சேர்ந்த நலச்சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்காமல், சிட்லப்பாக்கத்தில் மட்டும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது ஏற்கமுடியாது.ஒரு தரப்பு மக்களிடம் மட்டும் கருத்து கேட்டு, செம்பாக்கம் ஏரியில் சீரமைக்கும் பணியை தொடர்ந்தால், எங்களது கோரிக்கைகள், திட்டங்கள் தெரியாமலேயே போய்விடும். ஏரியை சுற்றியுள்ள மக்களிமும் கருத்து கேட்க கூட்டங்களை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி