உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் கம்பியில் சிக்கிய பட்டம் எடுக்க முயன்ற சிறுவன் சீரியஸ்

மின் கம்பியில் சிக்கிய பட்டம் எடுக்க முயன்ற சிறுவன் சீரியஸ்

கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, சிமென்ட் சாலை 'பி - பிளாக்'கைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி தேவி. தம்பதியின் மகன் நிதீஷ்குமார், 11; ஐந்தாம் வகுப்பு மாணவர்.குடும்ப பிரச்னை காரணமாக, சதீஷ்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிறுவன் நிதீஷ்குமார், கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரில் உள்ள பாட்டி மலர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.இந்நிலையில், நிதீஷ்குமார், நண்பர் ஜெகதீஷ், 9, என்பவருடன், தண்டையார்பேட்டை, ரயில்வே யார்டில் நேற்று பட்டம் விட்டு விளையாடி உள்ளார். அப்போது பட்டம், ரயில்வே வழித்தட உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கி உள்ளது. உடனே, நிதீஷ்குமார் குடிசை மீது ஏறி, இரும்பு கம்பியால் பட்டத்தை எடுக்க முயன்றார்.அப்போது இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து, சிறுவன் துாக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 65 சதவீத தீக்காயங்களுடன் தீவிர பிரிவில் நிதீஷ்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை