மேலும் செய்திகள்
சேதமான வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
16-Nov-2024
செங்குன்றம், செங்குன்றம், நாரவாரிகுப்பம் பேரூராட்சி, காமராஜர் நகரில், மின் வாரிய அலுவலகம் உள்ளது. 15,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின் கட்டணம் செலுத்தவும், மின் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்கவும், இந்த அலுவலகத்திற்கு பகுதிவாசிகள் வருவர்.இங்குள்ள அண்ணா தெருவில் கால்வாய் நிரம்பி, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடியதுடன், மின் வாரிய அலுவலகத்திற்குள்ளும் புகுந்தது. இதனால், பகுதிவாசிகள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அலுவலகத்தில் அட்டை மற்றும் கோணி சாக்கு போட்டு, அதன் மேல் ஊழியர்கள் நடந்து சென்றனர். கழிவுநீர் கால்வாயை சரி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
16-Nov-2024