உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெசன்ட் நகரில் சக்தி லாக்கர்ஸ் புதிய கிளை

பெசன்ட் நகரில் சக்தி லாக்கர்ஸ் புதிய கிளை

சென்னைசக்தி லாக்கர்ஸ் நிறுவனம், தனியார் பாதுகாப்பு பெட்டக சேவையில், பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. நாட்டில் பாதுகாப்பு பெட்டகங்களின் தேவை அதிகரித்து வருவதை கருதி, இந்நிறுவனம் நவீன பாதுகாப்பு வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில், சக்தி லாக்கர்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.புதிய கிளையை திறந்து வைத்து, எஸ்.எப்.எஸ்.எல்., நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ருதி பாலசுப்பிரமணியம் பேசுகையில், ''தங்க நகை உள்ளிட்ட ஆபரணங்கள் இந்திய சந்தையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ''உயர்ந்து வரும் தங்கம், வெள்ளியின் மதிப்பால், அவற்றை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை செலுத்துகின்றனர். தனித்துவமான சேவைகளை வழங்குவதன் வாயிலாக, சக்தி லாக்கர்ஸ், வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக மாறியுள்ளது,'' என்றார். சக்தி லாக்கர்ஸ் நிறுவன இயக்குநர் நினன் வர்கீஸ் கூறுகையில், ''பெசன்ட்நகர் கிளையானது பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளுடன் செயல்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை