உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காட்சிப்பொருளான இ-டாய்லெட் மக்களின் வரிப்பணம் வீணடிப்பு

காட்சிப்பொருளான இ-டாய்லெட் மக்களின் வரிப்பணம் வீணடிப்பு

வில்லிவாக்கம், பல மாதங்களாக, 'இ - டாய்லெட்' எனும் நவீன கழிப்பறைகள் பயனின்றி கிடப்பதால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எளிதாக பயன்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி 'இ - டாய்லெட்' வசதியை அறிமுகப்படுத்தியது.தற்போது, இந்த கழிப்பறை அனைத்தும் பராமரிப்பு இல்லாமலும், பல இடங்களில் பாழடைந்த நிலையிலும் காட்சிப் பொருளாகவே உள்ளன.குறிப்பாக, அண்ணாநகர் மண்டலம் வில்லிவாக்கத்தில், ஐ.சி.எப்., - எம்.டி.எச்., சாலையை இணைக்கும் பகுதியில், சென்னை மாநகராட்சியால், 'இ - டாய்லெட்' கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.ஆரம்பத்தில் உரிய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட இந்த கழிப்பறைகள், நாளடைவில் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீரழிந்தன.தற்போது, பல மாதங்களாக இந்த கழிப்பறைகள் மூடிய கிடக்கின்றன.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அண்ணா நகரில் மட்டுமல்லாமல் கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், பல ஆண்டுகளாக இந்த நவீன கழிப்பறைகள் பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கின்றன.சில இடங்களில் போதிய தண்ணீர் இல்லாததால், பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், கழிப்பறைகளை சுற்றி, பலர் சிறுநீர் கழித்து விட்டுச் செல்கின்றனர்.இதனால் வெளியேறும் துர்நாற்றத்தால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்தபடி செல்ல வேண்டியுள்ளது.இந்த கழிப்பறைகளை முறையாக பராமரிப்பதை விட்டுவிட்டு, புதிதாக நிதி ஒதுக்கீடு செய்து, மாநகராட்சி புதிய கழிப்பறைகளை கட்டி வருகிறது.இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது. புதிய கழிப்பறைகள் கட்ட கவனம் செலுத்துவது போல், வீணாகி வரும் இந்த கழிப்பறைகளை பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை