உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பவுடர் விற்பனை எஸ்.ஐ., கணவர், ஐவர் கைது

போதை பவுடர் விற்பனை எஸ்.ஐ., கணவர், ஐவர் கைது

புழல்வ. பாடி மேம்பாலம், பிரபல துணிக்கடை அருகே, சந்தேகப்படும்படியாக நின்ற ஆறு பேரை, புழல் போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆன்லைன் வழியாக ஆர்டர் பெற்று, போதைப் பொருள் விற்பது தெரியவந்தது.இதையடுத்து, வண்ணா ரப்பேட்டை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த, உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணி பெண் எஸ்.ஐ.,யின் கணவர் குமரவேல், 46, புழல் காவாங்கரையை சேர்ந்த தீபேஷ், 24, பார்த்திபன், 24, ஓட்டேரியைசேர்ந்த அமீர் பாஷா, 23, சுபாஷ், 27, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மைக்கேல், 30, ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து, 3 கிராம் மெத் ஆம் பெட்டமைன் போதைப் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ