உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில்பனி பொழிவிலும் நுங்கு விற்பனை

சென்னையில்பனி பொழிவிலும் நுங்கு விற்பனை

கே.கே., நகர், சென்னையில் பனி பொழியும் நிலையிலும், நுங்கு விற்பனை நடந்து வருகிறது.தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று பனை மரம். பனை மரத்தில் இருந்து கிடைக்கும், நுங்கு, பதநீர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை.நுங்கு சூட்டை தணிப்பதுடன், முக பருக்கள், வியர்வை கட்டிகள் உள்ளிட்ட நோய்களை நீக்கும் தன்மை கொண்டது. மேலும், தோல் நோய்களையும், சிறுநீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சலையும் குணப்படுத்த வல்லது.இதனால், சென்னையில் கோடை காலத்தில், சாலையோரங்களில் நுங்கு விற்பனை படு ஜோராக நடப்பது வாடிக்கை. தற்போது, சென்னையில் பனி பொழியும் நிலையிலும், கே.கே., நகர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரம் நுங்கு விற்பனை நடக்கிறது.நெல்லை மாவட்டத்தில் இருந்து நுங்கு எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். கோடை காலத்தில், 12 பீஸ் நுங்கு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, நுங்கு வரத்து குறைவு என்பதால், 8 பீஸ் நுங்கு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ