உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சிறப்பு எஸ்.ஐ., தற்கொலைக்கு முயற்சி

 சிறப்பு எஸ்.ஐ., தற்கொலைக்கு முயற்சி

சித்தாலப்பாக்கம்: சென்னை, சித்தாலப்பாக்கம், சி.பி.ஓ.ஏ., காலனி, மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பாபு, 53; சிறப்பு எஸ்.ஐ., இவர், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த நிலையில், இம்மாதம் 18ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் மருத்துவ விடுப்பில் உள்ளார். நேற்று அதிகாலை, தன் வீட்டில் சிறு கத்தியால் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட குடும்பத்தினர், தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக, பெரும்பாக்கம் போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை