உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்

மாநில வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்

சென்னை அழகர் கோவில் வாலிபால் கிளப் சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி, மதுரையில் நடந்தது. இதில், 30க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் முதல் லீக் சுற்றில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 20, 25 - 23, 25 - 12 என்ற கணக்கில், தமிழக போலீஸ் அணியையும், 19 - 25, 25 - 21, 25 - 20, 25 - 21 என்ற கணக்கில், ஈரோடு பி.கே.ஆர்., அணியையும் தோற்கடித்தது.அனைத்து போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., முதலிடத்தையும், பி.கே.ஆர்., அணி இரண்டாமிடமும் பெற்றன. மதுரை அமெரிக்கன் கல்லுாரி மற்றும் சென்னை ஜேப்பியார் அணிகள் அடுத்தடுத்த இடங்களை வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி