உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாஸ்மாக் கடை அகற்ற போராட்டம்

டாஸ்மாக் கடை அகற்ற போராட்டம்

நன்மங்கலம்:மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில், அருள்முருகன் நந்தவனம் நகர் செல்லும் வழியில், ஏரிக்கரை ஓரமாக தமிழக அரசின் 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது.சாலைக்கு மிக அருகே உள்ள இந்த மதுக்கடையால், அவ்வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் உள்ளது. இரவில் பணி முடித்து வீடு திரும்பும் பொதுமக்களுக்கு, 'குடி'மகன்களால் அச்சுறுத்தல் நிகழ்கிறது. எனவே, இந்த மதுக்கடையை மூடக்கோரி, 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ